Back to home
A Symphony of Us
Acoustic

A Symphony of Us

Sudhan SudhanSudhan Sudhan
0 likes0 plays3:38
Style: male vocal, Soulful vocals, piano, violin, flute, romantic, happy
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

கம்பன் பாடிய காவியம் நீயடி

பிக்காசோ வரஞ்ச ஓவியம் நீயடி

பக்கத்து ஊருல மொளச்ச பூச்செடி

தண்ணி கொண்டு நானும் நதியா வாரண்டி

அனைய போட்டென்ன தடுத்தது ஏனடி

நதியோ கடலா மாறுது கண்மணி!

என்னம்மோ எண்ணமெல்லாம் மீனா மாறுது

கண்மணி உன் பேர கவிதையா பாடுது!

மெட்டு போட நானும் மேகங்களை கூட்டி வந்தேன்

உன் மின்னல் பார்வை அந்த சத்தத்தையும் மிஞ்சிடுச்சு!

எல்லோரும் கூறுவார்கள்

அவர்களுடைய காதலியின் கண்கள்

காந்தத்தைப் போல என்று

ஆனால் நான் கொஞ்சம்

விசித்திரமானவன்

என் காதலியின் கண்கள்

கருந்துளையைப் போன்றது

சிக்கி எதுவும் தப்பியதில்லை

ஒளி கூட ஒளிய முடியாது

நானோ மானுடன்

என்ன செய்வேன்

சிக்கினேன் சிதறினேன் அவள்

எனக்கில்லை என்று கதறினேன்

அவள் அழகைக் கூற

வார்த்தைகள் தேடினேன்

தமிழில் வார்த்தை

கிடைக்கவில்லை

பிற மொழிகள் எனக்கு

புரியவில்லை

பின்பு உணர்ந்தேன்

அழகியின் அழகை கூறத்தான்

வார்த்தைகள் வேண்டும் ஆனால்

அவள் தான் அந்த அழகே

அதற்கு என்ன நான் கூறுவது

பிரம்மனின் படைப்பு ஒன்று

என் வழியினில் ஓடி வர

தேவர்கள் மலர் தூவி

அவள் மணமகள் என்றார்கள்

மணமகன் யார் என்று

மலை மீது ஏறி நின்று

எட்டு திசையும் பார்த்தேன்

என்னைத் தவிர எவரும் இல்லை

மணமகன் நான் என்று

அவள் அருகினில் சென்றேன்

இடி ஒன்று இடித்து

இரவினில் முழித்தேன்

பின்புதான் உணர்ந்தேன்

கண்ட காட்சியெல்லாம்

கனவென்று

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!