Back to home
Whispers on the Wind
Soul

Whispers on the Wind

Prabakar IS (Ubarpsi)Prabakar IS (Ubarpsi)
0 likes1 plays4:55
Style: female vocal, soft vocals, Soulful vocals, Melodic, strings, violin, flute, romantic, peaceful, uplifting
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

ஒளியாகவா, ஒளியாகவா!

விழியாக நீயும்

என்னைப் பார்க்க வா....!

மொழியாகவா, மொழியாகவா!

இதழாக நீயும்

என்னைப் பேச வா...!

கனவாகவா, நிலவாகவா,

இருளாகவா, ஒளியாகவா,

இரவோடு கொஞ்சம்

நீயும் என்னைக்

காண வா....

ஒளியாகவா, ஒளியாகவா!

விழியாக நீயும்

என்னைப் பார்க்க வா....!

மொழியாகவா, மொழியாகவா!

இதழாக நீயும்

என்னைப் பேச வா...!

மலர்களில் பிறக்கிற

மதுவும் ஆகிறேன்...

மதுவினில் கிடைக்கிற

போதையாக வா!

தினம் தினம் நடக்கிற

வழியும் ஆகிறேன்...

வழியினை கொடுக்கிற

பாதையாக வா!

உலகினை சுடுகிற

வெயிலும் ஆகிறேன்...

வெயில் தினம் அடிக்கிற

கோடையாக வா!

மலையினில் பிறக்கிற

அருவி ஆகிறேன்...

அருவியும் கலக்கிற

ஓடையாக வா!

விரலாக வா,

விரைவாக வா,

எனை -

வந்து வந்து

மீண்டும் மீண்டும்

நீ... தீண்ட வா....

ஒளியாகவா, ஒளியாகவா!

விழியாக நீயும்

என்னைப் பார்க்க வா....!

மொழியாகவா, மொழியாகவா!

இதழாக நீயும்

என்னைப் பேச வா...!

விடைகளை தேடிடும்

கேள்வி ஆகிறேன்...

கேள்வியைத் தூண்டிடும்

தேவையாக வா!

தலைகளில் சூடிடும்

பதவி ஆகிறேன்...

பதவியைத் தாண்டிய

சேவையாக வா!

கதவுகள் மூடிடும்

வாசல் ஆகிறேன்...

வாசலைத் திறக்கிற

சாவியாக வா!

துறவிகள் போர்த்திடும்

ஆடை ஆகிறேன்...

ஆடையில் இருக்கிற

காவியாக வா!

எனக்காக வா,

எனதாக வா,

இதை -

என்ன வென்று

நானும் சொல்ல,

ஓ... ஆண்டவா!

ஒளியாகவா, ஒளியாகவா!

விழியாக நீயும்

என்னைப் பார்க்க வா....!

மொழியாகவா, மொழியாகவா!

இதழாக நீயும்

என்னைப் பேச வா...!

கனவாகவா, நிலவாகவா,

இருளாகவா, ஒளியாகவா,

இரவோடு கொஞ்சம்

நீயும் என்னைக்

காண வா....

ஒளியாகவா, ஒளியாகவா!

விழியாக நீயும்

என்னைப் பார்க்க வா....!

மொழியாகவா, மொழியாகவா!

இதழாக நீயும்

என்னைப் பேச வா...!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!