Back to home
Velvet Basement
Alternative Rock

Velvet Basement

sharmila bindhiyasharmila bindhiya
0 likes0 plays2:52
Style: female vocal, drums, bass, nostalgic
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Chorus]

தினம் தினம் அவள் முகம் பார்த்திட வேண்டும் என்று இதயம் எனை கேட்குதே… அவள் வரும் பாதையை பார்த்து நாட்களும் நகர மறக்குதே… அவள் குரல் கேட்டிட வேண்டும் என்று என் செவிகளும் ஏங்கித் தவிக்குதே… அவள் விழிகள் தவிர இனி யார் விழிகளையும் என் விழிகள் இரசிக்காதே..

சூரியன் வந்த போது தேவதை வெளிவரும் போது இதயம் துடிக்க மறந்ததை கண்டேன்… அவள் சிரிப்பினில் இமைகள் வியந்து பார்க்கும் அழகை ரசித்திட நானும் தொலைந்தேன்…

[Verse 1]

பூக்களும் கூட அவளைக் கண்டதும் வியந்து பார்க்குதே… நிலவின் ஒளியை விடவும் அவள் முகம் அழகாய் இருக்குதே… பிரமன் கூட அவளைக் கண்டு வியந்து போவானே…

அவள் அழகைப் பற்றி வர்ணிக்க பல வரிகள் கவிதையாக என் மனதில் பிறக்குதே… அவள் விழிகள் பேசும் மொழிகள் பார்த்திட இந்த ஜென்மம் கிடைத்ததோ… அவள் நடந்து செல்லும் பாதை கூட அழகாக தெரியுதே… அவள் அழகைக் கண்ட என் மனம் மயங்குதே…

காற்றோடு அவள் வாசம் வீசிடுதே கண்மூடும் நேரம் அவள் விழிகள் தோன்றிடுதே தனிமையில் அவள் நினைவு பேசிடுதே தடுமாறி என் மனமும் ஏங்கிடுதே…

[Verse 2]

விழி மூடும் நேரத்திலும் அவளே தெரிகிறாள் விழி திறக்கும் போதிலும் அவளே தெரிகிறாள் என் பாதை செல்லும் திசையிலும் அவளே தெரிகிறாள் என் நினைவுகள் முழுவதும் அவளே வருகிறாள்

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!