
Sunlit Duet
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
(female)
என் மனமே என் மனமே,
என் மனம்
சேர்ந்தது உன்னிடமே...
(male)
உன் குணமே உன் குணமே,
உன் குணம்
சேர்ந்தது பொன்னிடமே...
(female)
பார்த்திட புன்னகை
வந்திடுமே...
கோர்த்திட கைகளை
தந்திடுமே...
(male)
காதலில் என்மனம்
தங்கிடுமே...
ஆசைகள் நீவர
பொங்கிடுமே...
(female & male)
நீ வரவே,
தேன் தரவே,
கிடைத்தது வாழ்வினில்
புதுவித வரமே....
(female)
என் மனமே என் மனமே,
என் மனம்
சேர்ந்தது உன்னிடமே...
(male)
உன் குணமே உன் குணமே,
உன் குணம்
சேர்ந்தது பொன்னிடமே...
(male)
தேவதை உனதிரு
பாதமும் படுகிற
பாதையில்
தினமொரு
ஊர்கோலம்!
(female)
காதலைத் தருகிற
ஆடவன் தொடுகிற
வேளையில்
விரல்களும்
பூக்கோலம்!
(male)
அழகினின்
மறு உருவாய்....
உலகினில் பிறந்ததுமேன்?
(female)
விழிகளில் நுழைந்ததனால்...
மனதினில் கலந்ததுமேன்?
(male)
கரைகளை தொடுகிற
அலைகளை தருகிற
கடலினை கலக்கிற
நதியானேன்....
(female)
கனவினை கொடுக்கிற
இரவினை கெடுக்கிற
திருடனை விரும்பிடும்
சதியானேன்...
(female & male)
யார் தயவோ,
யார் தவமோ,
இணைந்தது வாழ்வினில்
இருவரின் கரமே...
(female)
என் மனமே என் மனமே,
என் மனம்
சேர்ந்தது உன்னிடமே...
(male)
உன் குணமே உன் குணமே,
உன் குணம்
சேர்ந்தது பொன்னிடமே...
(female)
வேதனை தருகிற
சோதனை முடிகிற
காலமும்
அது இனி
கார்காலம்!
(male)
போதையில் விழுகிற
பாதையில் எழுகிற
ஞானமும்
அழகிய
மாய் ஜாலம்!
(female)
தடைகளை
கடந்ததனால்....
கதவினைத் திறந்திடலாம்...
(male)
விடைகளை
அடைந்ததனால்...
விதிகளை மறந்திடலாம்...
(female)
மழைகளை பொழிகிற
முகில்களைத் தொடுகிற
பறவைகள் பறக்கிற
சிறகானேன்....
(male)
மலரினில் வழிகிற
மதுவினில் படுகிற
சிறகுகள் எதற்கென
சிறையானேன்...
(female & male)
வான் மழையே,
வான் மழையே,
பொழிந்திடு, வேர் விடும்
காதலின் மரமே...
(female)
என் மனமே என் மனமே,
என் மனம்
சேர்ந்தது உன்னிடமே...
(male)
உன் குணமே உன் குணமே,
உன் குணம்
சேர்ந்தது பொன்னிடமே...
(female)
பார்த்திட புன்னகை
வந்திடுமே...
கோர்த்திட கைகளை
தந்திடுமே...
(male)
காதலில் என்மனம்
தங்கிடுமே...
ஆசைகள் நீவர
பொங்கிடுமே...
(female & male)
நீ வரவே,
தேன் தரவே,
கிடைத்தது வாழ்வினில்
புதுவித வரமே....