Back to home
Echoes of a Fading Light
Soul

Echoes of a Fading Light

Santhosh KSanthosh K
0 likes1 plays0:10
Style: cinematic, orchestral, epic, strings, brass, percussion, dramatic, emotional, male vocal, sad, nostalgic, chill, Soulful vocals
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

அக்கா

உன்னை என்னவென்று சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை

அக்கா என்று அழைக்கும் அந்த ஒரு வார்த்தைக்குள் என் உலகமே இருக்கிறது

நீ என் சந்தோஷம்

நீ என் அமைதி

நீ என் நண்பி

நீ என் ஆசிரியர்

நீ என் வழிகாட்டி

என் குழப்பங்களுக்கு விடை

என் முடிவுகளுக்கு துணை

என் கண்ணீருக்கு ஆறுதல்

என் மனசுக்கு நிம்மதி

என்னை நான் புரிந்துகொள்ளாத நேரத்திலும் என்னை புரிந்துகொண்டவள் நீ

நான் சொல்லாத வலியையும் என் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் கவலையையும் புரிந்துகொள்கிறவள் நீ

உன்னிடம் இருந்து வரும் ஒரு சின்ன வார்த்தை கூட என் முழு நாளையும் மாற்றிவிடும்

உன் ஒரு சிரிப்பு போதும் என் மனசுக்குள் இருக்கும் ஆயிரம் கவலைகளும் அமைதியாகிவிடும்

நீ இருக்கிறாய் என்ற ஒரு உணர்வே எனக்கு ஒரு உலகம் கிடைத்த மாதிரி

எத்தனை பேர் என் வாழ்க்கையில் வந்தாலும்

எத்தனை பேர் என்னை விட்டு சென்றாலும்

உனக்காக என் மனதில் இருக்கும் இடம் மட்டும் ஒருபோதும் மாறாது

அந்த இடத்தில் யாராலும் வர முடியாது

யாராலும் உன்னை மாற்ற முடியாது

ஏனென்றால் நீ என் வாழ்க்கையில் வந்த ஒரு மனிதர் மட்டும் இல்லை

என் வாழ்க்கையோடு கலந்த ஒரு உணர்வு

சிலர் வந்தார்கள்

சிலர் போனார்கள்

சிலர் மறந்தார்கள்

சிலர் மாறினார்கள்

ஆனால் நீ மட்டும் மாறாமல் என் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று என் மனசு தினமும் வேண்டிக்கொள்கிறது

உன்னை இழந்துவிடுவோமோ என்ற எண்ணமே என் மனசுக்கு மிகவும் கனமானது

அதனால்தான் உன் அன்பை இவ்வளவு ஆழமாக பிடித்துக்கொள்கிறேன்

உன் அன்பு எனக்கு வேண்டும்

உன் ஆதரவு எனக்கு வேண்டும்

உன் சிரிப்பு எனக்கு வேண்டும்

உன் ஒரு வார்த்தை எனக்கு வேண்டும்

எல்லாவற்றையும் விட நீ என் வாழ்க்கையில் இருக்க வேண்டும்

நீ சந்தோஷமாக இருந்தால் என் மனசும் சந்தோஷமாகும்

நீ சிரித்தால் காரணமே இல்லாமல் எனக்கும் சிரிப்பு வரும்

நீ கஷ்டப்பட்டால் என் மனசும் வலிக்கும்

நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று தெரிந்தால் எனக்கு நிம்மதி வரும்

உனக்கு உலகமே எதிராக இருந்தாலும் எங்காவது ஒரு மூலையில் உனக்காக உண்மையாக கவலைப்படும் உன் தம்பி ஒருவன் இருக்கிறான் என்பதை மட்டும் மறந்துவிடாதே

நான் பெரியவனாகலாம்

தூரம் செல்லலாம்

என் வாழ்க்கை மாறலாம்

எவ்வளவு �

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!