
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
கார்த்திகைத் திங்கள் முதலாம் நாள்
முல்லை மணங்கமழ் மாலை பொழுதின்
முகிலினுள் தோன்றிய முழுநிலவொளியே மண்ணகத்து வந்த மழலைக் கதிரே— அதிக்ஷனே என் ஆருயிரே !
வெள்ளை முகில் பேரழகே
சிமிட்டும் விழி ஓரழகே
பிஞ்சு கரங்கள் தொடுகையிலே
கொள்ளை போகும் என் உயிரே
ஒற்றை நொடி பிரிவினிலே
சித்தம் கலங்கி துடிக்கிறதே
அதிக்ஷனே என் ஆருயிரே
மழலை சிரிப்போடு மாயங்கள் செய்கிறாய்
இளமுதல் வயது கண்டும் இம்சைகள் செய்கிறாய்
மழலை மொழியோடு
மருதம் இசைக்கிறாய்
அதிக்ஷனே என் ஆருயிரே
வெள்ளைப் பூவே
துள்ளும் மானே
கவிதை மொழியே
மழலைக் கவியே
உள்ளம் கொள்ளும்
உயிரின் அசைவே
அறியா உணர்வின்
அதிசயமே - என்
காதல் முடிவே
அதிக்ஷனே என் ஆருயிரே