Back to home
The Long Way Home
Acoustic

The Long Way Home

18UTAA021 K.Bharathi18UTAA021 K.Bharathi
0 likes1 plays4:34
Style: folk, acoustic guitar, vocals, harmonica, 95 bpm, storytelling, authentic, warm, sad, male vocal, Melodic
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

அப்பாவும் அம்மாவுமா நீயே இருந்தாயே

கண்ணு கலங்கினா துடைத்திடும் தாயே

பட்டினியே பார்க்காம தாயப்போல வளர்த்தாயே

தட்டிவிழுவேனு தா தோழுல சுமந்தாயே

பெத்துப்புட்டு போய்டானு தூக்கி எரியாம

பத்து மாசம் சுமந்தவளா என்ன சுமந்து வளர்த்தாயே

கால்வலி தெரியாம கால்புடுச்சு விட்டவளே

ஓ கால புடிக்குமுன்னே நீ தூங்கி விட்டாயே...

எப்பத்தா வருவேனு வழிமேல காத்திருந்த

வந்தது தெரியாம இன்னுந்தா தூங்குரியே

அழுகவே கூடாதுனு சொல்லிதா வளர்த்தவளே

ஓ தம்பி கதருரேனே ஓ காது கேக்களையோ

ஓ முகத்த பார்க்காம

ஏ முகமும் வாடி போச்சு.

மடியில தூங்க வச்ச

இப்போ கயித்துல தொங்குரியே.

நா தூங்காம இனுக்கும் போது

ஓ தூக்கத்த துலைத்தாயே.

கயித்துல தொங்கும்போது

தொப்புல் கொடி மறந்தாயோ...

தம்பிக்கு பாரமுனு

விட்டுதா பிரிந்தாயோ.

கொலகார பூமியில

தவிக்கவிட்டு போனாயோ.

தாயப்போல வளர்த்தாயே

தந்தைப்போல வளர்தாயே.

தூசிதும்பு படுமேனு

ஓ தாவணியில மறைத்தாயே.

ஓ அழுகைய மறைத்துவிட்டு

ஏ சிரிப்ப ரசுச்சாயே.

ஒரு வாய் எனக்கூட்ட

மறுவாய் உனக்கூட்ட

ஊட்டிய சாப்பாடு வாக்கரிசியா மாறிபோச்சே....

ஓ முகத்த பார்க்காம

ஏ முகமும் வாடி போச்சு.

மடியில தூங்க வச்ச

இப்போ கயித்துல தொங்குரியே.

அப்பாவும் அம்மாவுமா நீயே இருந்தாயே

கண்ணு கலங்கினா துடைத்திடும் தாயே

பட்டினியே பார்க்காம தாயப்போல வளர்த்தாயே

தட்டிவிழுவேனு தா தோழுல சுமந்தாயே

பெத்துப்புட்டு போய்டானு தூக்கி எரியாம

பத்து மாசம் சுமந்தவளா என்ன சுமந்து வளர்த்தாயே......

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!