Back to home
Two Voices One Heart
Vocal

Two Voices One Heart

B
Bala Iyer
0 likes0 plays5:37
Style: duet
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

தில்லையிலே

பல்லவியுடன் சிதம்பரத் திருத்தலப் புகழ்ப் பாடல்

பல்லவி

தில்லையிலே! தில்லையிலே!

திருச்சிற்றம்பலம் தில்லையிலே!

சபாநாயகன் அருள் பொழியும்

பொன்னம்பலம் எம் தில்லையிலே!

அனுபல்லவி

புலியூரில் பதஞ்சலியும்

பூஜை செய்த புண்ணியமே!

சித்சபையில் சிவனாடும்

சிவலோகமே தில்லையிலே!

1

ஆடலரசனையும்

அரங்கநாதனையும்

அருகே காண்பது

தில்லையிலே!

பல்லவி

2

புலிக்கால் முனிவரும்

பதஞ்சலி ரிஷியும்

பூஜித்து வந்ததும்

தில்லையிலே!

பல்லவி

3

சனகாதி முனிவரும்

சபாபதியை நித்தமும்

சேவித்து நின்றதும்

தில்லையிலே!

பல்லவி

4

நாட்டியப் போட்டியில்

காளியை வென்றதும்

எல்லைக்குச் சென்றதும்

தில்லையிலே!

பல்லவி

5

மூவாயிரவரும்

முக்கண்ணனை நாளும்

பூசனை செய்வதும்

தில்லையிலே!

பல்லவி

6

ஆறு காலமும்

அர்த்தசாமத்துடன்

ஆராதிப்பதும்

தில்லையிலே!

பல்லவி

7

ஏழு நிலைகொண்ட

நான்கு கோபுரங்கள்

எழிலுடன் நிற்பதும்

தில்லையிலே!

பல்லவி

8

பராந்தக சோழன்

பாங்குடன் வேய்ந்த

பொற்கூரை இருப்பதும்

தில்லையிலே!

பல்லவி

9

சிற்றம்பலத்தினில்

சிதம்பர ரகசியம்

சிறப்புடன் இருப்பதும்

தில்லையிலே!

பல்லவி

10

நால்வர் இயற்றிய

தேவாரம் திருவாசகம்

அரங்கேறியதும்

தில்லையிலே!

பல்லவி

11

ஆனி திருமஞ்சனமும்

ஆருத்ரா தரிசனமும்

அற்புதமாய் நடப்பதும்

தில்லையிலே!

பல்லவி

12

நான்கு மாட வீதியில்

நாதன் தேர் வருவது

கண்ணுக்கு விருந்தாகும்

தில்லையிலே!

பல்லவி

13

கொடிக்கவி இயற்றிய

உமாபதி சிவமும்

சோதியாய் கலந்ததும்

தில்லையிலே!

பல்லவி

14

பஞ்சபூதத் தலங்களில்

ஆகாயம் குறிக்கும்

அம்பலநாதன் கோவில்

தில்லையிலே!

பல்லவி

15

பாலகனுக்காக

பாற்கடல் கொணர்ந்த

திருப்பாற்கடல் இருப்பதும்

தில்லையிலே!

பல்லவி

16

அனந்தன் பாம்பினால்

அர்ச்சிக்கப்பட்ட

அனந்தீஸ்வரர் கோவில்

தில்லையிலே!

பல்லவி

17

முதிய நாயன்மாரை

ஆட்கொண்டு அருளிய

இளமையாக்கினார் கோவில்

தில்லையிலே!

பல்லவி

18

ஆடற்கலைக்கே

ஆதாரமான

நாட்டியாஞ்சலி நடப்பதும்

தில்லையிலே!

பல்லவி

19

பெரிய பிள்ளையாராய்

முக்குறுணி கணபதியும்

ஜடா விநாயகரும்

காட்சி தருவதும் தில்லையிலே!

மங்களச் சரணம்

பிறந்தால் முக்தி

ஆரூரிலே!

மரித்தால் முக்தி

காசியிலே!

நினைத்தால் முக்தி

அருணையிலே!

தரிசித்தால் முக்தி

எம் தில்லையிலே!

ௐ திருச்சிற்றம்பலம் ௐ

தென்னாடுடைய சிவனே போ

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!